» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை : தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 8, ஏப்ரல் 2021 3:05:06 PM (IST)

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 வருடம் சிறைதண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருகேயுள்ள மணப்பாடு புதுக்குடி மேற்கு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் லாரன்ஸ் (எ) அல்போன்ஸ் லாரன்ஸ் (39). இவரது மனைவி சியாமளா (32). இந்த தம்பதியருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி 8 வருடங்களாக குழந்தை இல்லை என்று கூறி லாரன்ஸ் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி சியாமளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனால் மனவேதனையடைந்த சியாமளா கடந்த 20.10.2014 அன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை கொண்டுள்ளார். இதுகுறித்து குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர். இவ்வழக்கை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் பாலமுருகன் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் இன்று, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய லாரன்ஸ் (எ) அல்போன்ஸ் லாரன்ஸ்க்கு 10 வருட சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்ட அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், அரசு வழக்கறிஞர் சுபாஷினி, தற்போதைய காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் காவலர் தங்கபாண்டி ஆகியோரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory