» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா நிதிக்காக திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் வழங்குவார்கள்: ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி 14, மே 2021 10:56:03 AM (IST)

கரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டாலும் மதியம் 12 மணிவரை மளிகை காய்கறி இறைச்சி கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது.அதேசமயம் கொரனா நிவாரணப் பணிகளுக்காக மக்கள் நிவாரண உதவிகளை வழங்கலாம் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திரை பிரபலங்களும் , தொழிலதிபர்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்

இந்நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா இரண்டாவது அலையால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள் "என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory