» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரபிக்கடலில் புயல் எதிரொலி : குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் பயங்கர கடல் சீற்றம்

சனி 15, மே 2021 3:54:32 PM (IST)

அரபிக்கடலில் உருவான தாக்டே புயல் எதிரொலியாக குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டு உள்ளது.

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. இப்புயலுக்கு  தாக்டே என்று பெயரிடப்பட்டு உள்ளது.

அரபிக்கடலில் உருவான  தாக்டே புயல் காரணமாக குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டு உள்ளது. தாக்டே புயல் உருவான தகவல் அறிந்ததும், அதனை மீன்வளத்துறையினர் கடலோர கிராமங்களுக்கு தெரிவித்தனர். அங்கிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தினர்.

அதன்படி குளச்சல், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைபடகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். அதே நேரம் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கி வருகிறார்கள்.இதற்கிடையே குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களான இனயம், இனயம்புத்தன்துறை, வள்ளவிளை, பூத்துறை, சின்னத்துறை, இரயுமன்துறை, நீரோடி பகுதியில் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் காணப்பட்டது.

பல இடங்களில் கடல் நீர் தடுப்பு சுவர்களை தாண்டி ஊருக்குள் வந்தது. இதனால் மீனவர்கள் கரையில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வள்ளங்கள், கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதுபோல கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றம் ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தொட்டுவிடும் அளவுக்கு கடல் அலைகள் எழுந்து மிரட்டின. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு காரணமாக கன்னியாகுமரி, கோவளம், மணக்குடி பகுதியில்இருந்து கட்டு மரங்களில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களின் கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory