» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் மின் விசிறிகள் : விஜய் வசந்த் எம்பி வழங்கினார்

சனி 15, மே 2021 5:31:15 PM (IST)



கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா  சிகிச்சை மையத்திற்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான மின் விசிறிகளை விஜய் வசந்த் எம்பி வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீழ்ச்சில் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, மாவட்டத்தின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கரோனா நோய் தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து, மாவட்டத்திற்குட்பட்ட ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசுவாமி கல்லூரி ஆகிய பாதுகாப்பு மையங்களிலும், நோயாளிகள் தங்க வைத்து, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களை தங்க வைத்து, சிகிச்சைகள் அளிக்கும் நோக்கில், கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி, கரோனா பராமரிப்பு மையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பாதுகாப்பு மையத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்; வ.விஜயகுமார் (எ) விஜய்வசந்த் தனது சொந்த செலவில் ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான 150 மின்விசிறிகளை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், அவர்களிடம் இன்று (15.05.2021) கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வழங்கினார்கள். நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திருப்பதி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சுசீலா, வசந்த் அன்ட் கோ குழும உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து

adminfanமே 15, 2021 - 07:55:19 PM | Posted IP 46.16*****

எங்க ஊரு mp. குலப்பெருமையை நிலை நாட்டுகிறார்.

adminமே 15, 2021 - 07:46:57 PM | Posted IP 162.1*****

iruppavar enbavar koduppavare.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory