» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் மீண்டும் திறப்பு: கடை முன்பு சூடம் ஏற்றி, பூ தூவி மதுப்பிரியர்கள் உற்சாகம்!

திங்கள் 14, ஜூன் 2021 12:00:37 PM (IST)



மதுரையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்தில், மதுப்பிரியர் ஒருவர் கடை முன்பு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இன்று முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மற்றும் சலூன் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுக்குடிப்போர் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில், மதுரையில் மதுக்கடை திறக்கப்பட்டதால் ஆர்வமிகுதியில் மதுப்பிரியர் ஒருவர், கடை முன்பாக சூடம் ஏற்றி, பூ தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory