» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எதிர்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக வேலுமணி, பொருளாளராக கடம்பூர் ராஜு தேர்வு!

திங்கள் 14, ஜூன் 2021 4:17:27 PM (IST)

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்ஸும், கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டனர்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக ஆட்சி அமைத்தது. 65 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. பின்னர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

*சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.

*கட்சிக்கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி தேர்வு செய்யப்பட்டார்.

* துணைக்கொறடாவாக அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி தேர்வு செய்யப்பட்டார்.

* பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்வு செய்யப்பட்டார்.

* செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார்.

* துணைச் செயலாளராக ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக்கூட்டத்தில் சசிகலாவுடன் ஆடியோவில் யாராவது பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory