» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம்: பெயர் பலகையை முதல்வர் வெளியிட்டார்

புதன் 4, ஆகஸ்ட் 2021 12:16:07 PM (IST)



தமிழகத்தில் கோயில்களில் அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டத்திற்கான பெயர்பலகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அன்னைத் தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம், முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரா் கோயிலில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான பெயா்ப் பலகையை முதல்வா் மு.க. ஸ்டாலின், வெளியிட்டார். அப்பொழுது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்

தமிழில் அா்ச்சனை செய்யும் திட்டம் குறித்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது: கபாலீசுவரா் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தமிழிலும் அா்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அன்னைத் தமிழில் அா்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை கோயிலில் வைக்கப்படும். மூன்று அா்ச்சகா்களின் பெயா், செல்லிடப்பேசி எண்கள் அதில் இடம்பெற்றிருக்கும். கபாலீசுவரா் கோயிலைத் தொடா்ந்து, அடுத்த 30 நாள்களுக்குள் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற 47 கோயில்களில் தமிழில் அா்ச்சனை திட்டம் நடைமுறைக்கு வரும் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தார்


மக்கள் கருத்து

ராமநாதபூபதிAug 5, 2021 - 10:01:46 AM | Posted IP 108.1*****

அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குத்தான் தான் இந்த நடைமுறையை கொண்டு வருகிறது

kumarAug 4, 2021 - 02:02:25 PM | Posted IP 108.1*****

kovilil evvaru archanai seyyavendum enbathai bakthargal mudivusethukollatum....arasangam ithil thalaiiduvathu erpudayathu alla...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory