» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மண்பாண்ட தொழிலாளர்கள் அனுமதியின்றி மண் எடுக்கலாம்: அரசாணை வெளியீடு

சனி 25, செப்டம்பர் 2021 11:24:03 AM (IST)

மண்பாண்ட தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.  செங்கள் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுப்பதில் விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

அதன்படி, மண் எடுப்பதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மண் எடுக்கலாம். 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக சுற்றுசூழல் அனுமதி பெற்று தான் மண் எடுக்கும் சூழல் இருந்த நிலையில், தற்போது அதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது.

சாலை, பொதுப்பணித் துறை மற்றும் பிற அரசுப் பணிகள் தடையின்றி நடைபெற சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்க கடந்த ஜூலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை திருத்தி தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்டத் தொழில் செய்வோா், செங்கல் சூளை வைத்திருப்போா், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோா் ஆகியோா் மண் எடுக்க அனுமதி தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory