» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு

வெள்ளி 15, அக்டோபர் 2021 10:18:05 AM (IST)

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதற்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.  தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வந்தது. அதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு இன்று அறிவித்தது.

அதன்படி   தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டு தலங்களை  திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியாகி உள்ள இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

maaveranOct 15, 2021 - 04:31:25 PM | Posted IP 162.1*****

ithu bjp leader annamalai kku kidaitha vetri

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory