» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்: ஜெயக்குமார்

சனி 16, அக்டோபர் 2021 4:27:50 PM (IST)

சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ச‌சிகலா சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிறையில் இருந்து விடுதலையான பின் முதன் முறையாக ஜெயல‌லிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார், அவர் வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. . 

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை, அமமுகவில் வேண்டுமானால் டிடிவி தினகரன் இடம் கொடுக்கலாம். அதிமுகவை கைப்பற்ற நினைப்பது பகல் கனவாகத்தான் இருக்கும். சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த தார்மீக உரிமை கிடையாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கொடியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றார். 


மக்கள் கருத்து

தமிழக மக்கள்Oct 17, 2021 - 02:29:40 PM | Posted IP 108.1*****

உங்கள் கருத்து மிகவும் சரி. அதிமுகவில் இவர் இல்லாவிட்டால்தான் நல்லது.அதிமுகவிற்கு சரியான தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான். Better to remove sleepers....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory