» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நர்சரி, கிண்டர்கார்டன் மையங்களை திறப்பது குறித்து விரைவில் தெளிவான உத்தரவு

சனி 16, அக்டோபர் 2021 4:34:13 PM (IST)

நர்சரி மற்றும் கிண்டர்கார்டன் மையங்களை திறப்பது குறித்து விரைவில் தெளிவான உத்தரவு வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் தளர்வுகள் பற்றிய அறிவிப்பில், நர்சரி மற்றும் அங்கன்வாடிப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. கடந்த வாரம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளில், தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் அங்கன்வாடிப் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. ஆனால், தற்போது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், நர்சரி மற்றும் அங்கன்வாடிப் பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பு தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அங்கன்வாடியில் குழந்தைகளை வரவழைத்து உணவு வழங்குவது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதனுடச் சேர்ந்து நர்சரி மற்றும் கிண்டர்கார்டன் குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது. நர்சரி மற்றும் கிண்டர்கார்டன் மையங்களை திறப்பது குறித்து விரைவில் தெளிவான உத்தரவு வெளியிடப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory