» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகனைக் கொன்று மனைவியுடன் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை: தஞ்சை அருகே சோகம்!!

திங்கள் 6, டிசம்பர் 2021 12:35:01 PM (IST)

தஞ்சாவூர் அருகே மகனை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மனோ நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திருவையாறில் டீக்கடையும்  நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தகவலில்,  கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இதுகுறித்துபோலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் போலீசார் நிகழ்விடத்துக்குச் சென்று பார்த்த போது 3 பேரும் வீட்டில்  பிணமாகக் கிடந்தனர்.

இதில், ராஜாவுக்கு வணிகத்தில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொருவருக்கு விற்றுள்ளார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory