» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்வே பணிகளுக்கு இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம் : தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்

செவ்வாய் 7, டிசம்பர் 2021 4:42:32 PM (IST)

ரயில்வே தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம். ரயில்வே பணிகளுக்கு இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில்வே துறையில் பொறியியல், இயந்திரவியல், மின்சார பணிகள், தொலை தொடர்பு, மருத்துவமனை, பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் போன்ற பதவிகளுக்கு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் RRC - 01/2019 வாயிலாக விண்ணப்பங்கள் கேட்கப்பட்டிருந்தது. 

வந்திருந்த விண்ணப்பங்களில் சிலவற்றில் தவறுதலான புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றிற்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டிருந்தது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு தற்போது மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மாறுதலுக்கான ஒரு இணையதள இணைப்பு கொடுக்கப்பட இருக்கிறது. 

அந்த இணையதள இணைப்பை பயன்படுத்தி தங்களது சரியான புகைப்படம் மற்றும் கையெழுத்தை பதிவு செய்து கொள்ளலாம். தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா அல்லது நிராகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய ரயில்வே தேர்வு ஆணைய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு அறிந்து கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. 

ரயில்வே தேர்வாணைய தேர்வுகள் முழுவதும் கணிப்பொறி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம். ரயில்வே தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory