» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

புதன் 19, ஜனவரி 2022 7:53:54 AM (IST)

தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன. 21 (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலில் (வண்டி எண்: 16235) இதுவரை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே பயணிக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பயணிகள் வசதிக்காக தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜன.21 (வெள்ளிக்கிழமை) முதல் தூத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்பட்டு வரும் இரண்டாம் வகுப்பு பொது, சரக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் இரண்டு பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படுகிறது என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory