» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயிலில் 5 நாள்களுக்குப் பிறகு அனுமதி : நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

புதன் 19, ஜனவரி 2022 10:32:37 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 5 நாள்களுக்குப் பிறகு மீண்டும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ’தைப்பூச திருவிழா’ மிக முக்கிய திருவிழாவாகும். இந்தாண்டு தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. 

மேலும்,  பொங்கல் விடுமுறையில் அதிக அளவு பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தைப்பூச நாளன நேற்று பக்தர்கள் அனுமதியின்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இருப்பினும், வெளியூர்களில் இருந்தது தரிசனத்திற்காக குடும்பத்துடன் வந்த பக்தர்கள், கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயிலில் நின்றபடியும், தூரத்தில் நின்றபடியும் கோபுரத்தை நோக்கி வணங்கிவிட்டு ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில்,  5 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அதிகாலை 5 மணி முதலே கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தால், பொதுதரிசனம், கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


மக்கள் கருத்து

முருகன் அடிமைJan 19, 2022 - 03:02:34 PM | Posted IP 157.4*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory