» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில் மனு

வியாழன் 20, ஜனவரி 2022 8:03:02 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புக்கு அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், ‘ஆலையில் உள்ள உயர் ரக இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த மனுவை ரத்து செய்து, ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் நேற்று இதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை பயன்படுத்தும் இடத்தை வேதாந்தா நிறுவனம் தற்போது வரையில் சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயந்திரங்களை எடுத்து செல்ல நிறுவனம் விரும்பினால் அதற்கான வசதிகளை அரசு தரப்பில் செய்து தரப்படும். அதேப்போன்று மழைக் காலத்தில் இருந்த பிரச்னைகள் அனைத்தும் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் ஆலை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கண்காணித்து வருகின்றனர். அதனால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கு இன்று விசாரணை பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் அது நீக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

M.Balaguru,TuticorinJan 21, 2022 - 10:46:05 AM | Posted IP 173.2*****

ஆலைகளை வைத்து அரசியல் செய்தது போதும்.பல குடும்பங்கள் வறுமையில் காலந்தள்ளுகிறது. இனி வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து அரசியல் செய்யுங்கள்.

கே.கணேசன்Jan 20, 2022 - 08:53:04 PM | Posted IP 162.1*****

தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மிகவும் ஏமாற்றமாக உள்ளது.தமிழக அரசை மறுபரிசீலனை செய்ய உண்ணாவிரதம் இருந்து வலியுறுத்த வேண்டும்.

உண்மJan 20, 2022 - 09:27:40 AM | Posted IP 173.2*****

திராவிட கட்சிகள் இருக்கும்வரை ஸ்டெர்லைட் காலிப் பண்ணாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory