» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு வருகிறது: எடப்பாடி பழனிசாமி

வியாழன் 20, ஜனவரி 2022 5:08:42 PM (IST)

தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதையும், அண்மையில் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் நடைபெற்ற தவறுகளை மறைக்கும் விதமாக இந்த பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகிறது. 

அண்மையில் நியாய விலைக் கடைகள் மூலம் அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து பொருட்களும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை. அந்த  பொருட்களின் அளவு குறைந்தும் தரமற்றதாகவும் வினியோகிக்கப்பட்டது.  

அதேபோல் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. குறிப்பாக மக்களிடத்தே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிய இந்த அரசு அதனை மூடி மறைக்கும் வகையிலும், மக்களை திசை திருப்பும் நோக்கிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று முன்னாள் அமைச்சர் அன்பழகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அவதூறு பரப்பி மக்களை திசை திருப்பும் தி.மு.க.வின்  செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory