» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாண்டியன், வைகை, பொதிகை ரயில் கால அட்டவணையில் மாற்றம் : ஏப்ரல் 14 முதல் அமல்
செவ்வாய் 12, ஏப்ரல் 2022 8:18:11 PM (IST)
சிலம்பு மற்றும் அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையில் சில
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை செல்லும் பாண்டியன், வைகை விரைவு ரயில்கள், செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றின் கால அட்டவணையிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 முதல்
1) மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 09.35 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 09.55, 10.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.00, 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 05.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.
2) சென்னை - செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 03.10, 05.15, 05.35, 05.42, 5.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 03.05, 05.10, 05.30, 05.37, 05.53, காலை 06.07, 06.30, 06.43, 07.00, 07.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 08.15 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.
3) மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.10 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.30 மணிக்கு புறப்படும்.
4) மதுரை - பழனி விரைவு சிறப்பு ரயில் (06480) ஏப்ரல் 14 முதல் மதுரையிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.25 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.30, 07.38, 07.48 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 07.35, 07.44, 07.52 மணிக்கு புறப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின் நிலைய அதிகாரி கொலை வழக்கில் 2 பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!
ஞாயிறு 26, ஜூன் 2022 12:24:08 PM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை
ஞாயிறு 26, ஜூன் 2022 12:07:10 PM (IST)

உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 25, ஜூன் 2022 12:44:25 PM (IST)

தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
சனி 25, ஜூன் 2022 12:33:15 PM (IST)

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரம் வருகை : அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை!
சனி 25, ஜூன் 2022 11:24:56 AM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும்: மேயர் அறிவிப்பு
சனி 25, ஜூன் 2022 10:45:24 AM (IST)
