» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவுகிறது: ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதன் 22, ஜூன் 2022 11:18:04 AM (IST)

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு  நிலவுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது. கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தர்மம் மறுபடியும் வெல்லும் என்று டுவீட் செய்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் அம்மா நினைவிடத்திற்கு சென்றபோது, தேனாம்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து

எவன்Jun 22, 2022 - 04:40:00 PM | Posted IP 162.1*****

அரசியல் எல்லாம் கூ முட்டை

ARUMAIRAJJun 22, 2022 - 02:41:34 PM | Posted IP 162.1*****

சசிகலா உங்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்றவுடன் ஜெ .சமாதியில் தர்மயுத்தம் என்று ஒரு நாடகம் நடத்தினீர்கள். இப்போது உங்களுக்கு பதவி இல்லை என்றவுடன், சசிகலாவை கட்சியில் சேர்க்க முயலுகிறீர்கள், சர்வாதிகாரம் என்று குறை சொல்லுகிறீர்கள். அதிமுக தொண்டர்களுக்கு நீங்கள் கார் டயரை கும்பிட்டு கூழை கும்பிடுபோடுபவர் என்று தெரிந்து விட்டது. நீங்கள் அமமுக சென்றுவிடுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory