» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓ.பி.எஸ். வெளியேற வலியுறுத்தி உறுப்பினர்கள் முழக்கம்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் பரபரப்பு!
வியாழன் 23, ஜூன் 2022 11:29:33 AM (IST)
ஓ.பி.எஸ். வெளியேற வலியுறுத்தி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் துரோகி, அவர் வெளியேற வேண்டும் என பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். மேலும், இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைஅச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் கேட்டு கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!
புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் : நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
புதன் 14, ஜனவரி 2026 8:55:08 AM (IST)


VOTERJun 23, 2022 - 01:55:26 PM | Posted IP 108.1*****