» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக பொதுக் குழுவிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம்!
வியாழன் 23, ஜூன் 2022 12:22:43 PM (IST)
அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருந்த நிலையில்,கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.
சென்னையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓ.பன்னீர் செல்வம் துரோகி, அவர் வெளியேற வேண்டும் என பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். மேலும், இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைஅச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் கேட்டு கொண்டனர். இந்நிலையில், சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழு என்று முழங்கியவாறு, ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கமும் கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.
மக்கள் கருத்து
RAMAJun 23, 2022 - 01:55:42 PM | Posted IP 162.1*****
இனிமேல் அதிமுகவுக்கு நல்ல காலம். டயர் கும்பிடு சாமி வெளியேறிவிட்டார்.
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)





tamilanJun 23, 2022 - 07:05:35 PM | Posted IP 162.1*****