» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

வியாழன் 23, ஜூன் 2022 3:48:34 PM (IST)

கடலூர் அருகே  பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 3பேர் படுகாயம் அடைந்தனர். 

கடலூர் அருகே கோப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள எம்.புதூர் கிராமத்தில் வனிதா மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்களும் கூலிக்கு பட்டாசு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பட்டாசு தயாரிருக்கும் ஒரு குடோன் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தரை மட்டமானது. அதில் இருந்து அதே பகுதியை சேர்ந்த சித்ரா(35), அம்பிகா(50), சத்தியராஜ்(34) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜி, வசந்தா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்போது வெடி வாங்க வந்திருந்த வெள்ளக்கரை பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் (37) என்பவரும் படுகாயம் அடைந்தார். 

இது குறித்து தகவலறிந்த கடலூர் திருப்பாதிரிபுலீயூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory