» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயிலைக் கொளுத்தும் இளைஞர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்?” இயக்குநர் பேரரசு பேச்சு

வியாழன் 23, ஜூன் 2022 3:52:38 PM (IST)

ரயிலைக் கொளுத்தும் இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? என அக்னி பாத் திட்டம் குறித்து இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா பயிற்சியில் இயக்குநர் பேரரசு கலந்துகொண்டார். யோகா பயிற்சியில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பேரரசு, ''அக்னி பாதை திட்டம் இளைஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். இதன்மூலம் ஒருவருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, தேசப்பற்று கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ரயிலை கொளுத்துகிறார்கள் என்றால், இந்த தைரியம் இளைஞர்களுக்கு எப்படி வந்தது? இந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? ஆகவே தேச விரோதிகளை இத்திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. பொதுச்சொத்தை நாசம் செய்பவர்கள் தேசத்துரோகிதான். வன்முறை தூண்டிவிடப்படுகிறது. இந்தியாவுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.

பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேசத்தை வலிமை மிக்க நாடாக மாற்றும் நோக்கில் அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சமூக விரோதிகள் எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை வளர்ச்சி அடைய விடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் எவ்வித மத பேதமும் இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாரத மாதாவின் புகைப்படத்தை பதிவேற்றினாலும் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க இந்த திட்டத்தில் சேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள்'' என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து

kumarJun 24, 2022 - 11:09:04 AM | Posted IP 162.1*****

Right Question. They are not suitable for Indian Military. True Indians are welcoming AgniBat. Jai Hind

unmaiJun 24, 2022 - 06:19:45 AM | Posted IP 162.1*****

Sangi talking. brain washed and no brain to think.

truthJun 24, 2022 - 06:17:08 AM | Posted IP 162.1*****

Politicians are burning the country and its people.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory