» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல்: ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு பாஜக அழைப்பு

வியாழன் 23, ஜூன் 2022 5:50:22 PM (IST)



குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்னர். 

புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் நாளை நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory