» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேங்காய்பட்டணத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் பணிகள் : ஆட்சியர் தகவல்!

வெள்ளி 24, ஜூன் 2022 3:41:56 PM (IST)



தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தை ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுகமாக மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார். 

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆட்சியர் தெரிவிக்கையில்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மீனவர் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம், பெரியகாடு மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சின்னமுட்டம் சார்ந்த நாட்டுப்படகுகள் நிறுத்தும் இடத்தின் அருகோ நிறுத்திடவும், அங்கிருந்து தொழில் புரிந்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தி மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு அதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி, வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டம் துறையில் தமிழக அரசின் சார்பில் ரூ.116 கோடிக்கு நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளதோடு, நேர்கல் சுவர்கள் மற்றும் மீன் ஏலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தை ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகமாக மேம்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இத்துறைமுகத்தை சுற்றியுள்ள நீரோடி, வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டம்துறை உட்பட 15 மீனவ கிராமங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் குறும்பனை கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்து தருவதற்கான மனுக்கள், கடியப்பட்டணம் நேர்கல் சுவரினை செம்மைப்படுத்தி கூடுதலாக நீளம் நீட்டி கேட்டல், மீன்பிடி தடைக்காலங்களில் கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்படாமல் இருக்க ரோந்து படகு ஆய்வை தீவிரப்படுத்தக் கேட்டல், கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்க கேட்டல் உள்ளிட்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப்பிரியா, துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) காசிநாதபாண்டியன், உதவி இயக்குநர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory