» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முகக்கவசம் அணிவது கட்டாயம்: மீறுவோர் மீது ரூ.500 அபராதம் - ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 24, ஜூன் 2022 4:53:18 PM (IST)

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பரவல் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அந்தவகையில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள், உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மீறுவோர் மீது ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory