» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும்: மேயர் அறிவிப்பு

சனி 25, ஜூன் 2022 10:45:24 AM (IST)நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும் என்று மேயர் மகேஷ் அறிவித்துள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர நல அதிகாரி விஜய் சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சுவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தங்களத வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர் பேசினர். 

பின்னர் மேயர் மகேஷ் பேசுகையில், நாகர்கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு மாநகராட்சி மூலமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெற்ற பிறகே மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். பிளாட்டுகள் அமைப்பதற்கு அனுமதி கொடுப்பதற்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாநகர பகுதி தற்போது 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1.4.2008-க்கு பிறகு தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி எந்த மண்டலமாக இருந்ததோ அதே மண்டலமாக தான் தற்பொழுது செயல்படும். எனவே மண்டலங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் தான் பழைய முறைப்படி வரி விதிக்கப்பட்டுள்ளது.

100 முதல் 600 சதுரஅடி வரை உள்ள வீடுகளுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1000 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு 50 சதவீதமும், 1001 முதல் 1800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும் 1801 சதுர அடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். மாநகராட்சி கவுன்சிலர்களின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோட்டார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு இடங்களில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் அந்த பணி கிடப்பில் உள்ளது. சவேரியார் சந்திப்பு முதல் ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலை ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சீரமைக்க டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு புதிதாக 3 பொக்லைன் எந்திரம் வாங்கப்படும் என்றார். மண்டல தலைவர்கள் செல்வகுமார், முத்துராமன் மற்றும் கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, டி.ஆர். செல்வம், உதயகுமார், சேகர், அக் ஷயாகண்ணன், ரமேஷ், நவீன்குமார், அய்யப்பன், அனுஷா பிரைட் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory