» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சனி 25, ஜூன் 2022 12:44:25 PM (IST)முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" என்ற நிகழ்ச்சியை இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

இந்த திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

விழாவில் பேசிய முதல்வர்  "கடந்த சில நாட்களாக காய்ச்சலால் சோர்வாக இருந்த எனக்கு இந்த நிகழ்ச்சி புத்துணர்ச்சி அளிக்கிறது. முதல் அமைச்சராக வரவில்லை, சொந்த பிள்ளைகளாக எண்ணி உங்களை வாழ்த்த வந்துள்ளேன்" என்றார்.


மக்கள் கருத்து

sankarJun 25, 2022 - 05:10:24 PM | Posted IP 162.1*****

best comedi drama- but failed

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory