» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை

ஞாயிறு 26, ஜூன் 2022 12:07:10 PM (IST)தூத்துக்குடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி தேமுதிகவினர் சர்வமத பிரார்த்தனை செய்தனர். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டும் அரசியல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் தயாளசிங்கம் தலைமையில் பால விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் பெரிய பள்ளிவாசலில் தொழுகையும், பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் விஜயன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சின்னதுரை, சம்சுதீன், நாராயண முத்து, பேச்சிமுத்து, ராஜா, அரசு, முத்து, கந்தன், உட்பட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory