» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின் நிலைய அதிகாரி கொலை வழக்கில் 2 பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!

ஞாயிறு 26, ஜூன் 2022 12:24:08 PM (IST)

நாசரேத் துனைமின் நிலைய அதிகாரி கொலை வழக்கில் இளம் சீரார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூவையா. இவரது மகன் ஆனந்தபாண்டி (51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்த அவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்த கொலை தொடர்பாக எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமையில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக குறிப்பன்குளம் கிராமத்தை 17 வயது இளம் சிறார் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொடுத்த பரபரப்பான வாக்குமூலத்தில் வருமாறு எனது தந்தை ராஜா நாசரேத் மின் நிலையத்தில் லைன் மேன் ஆக வேலை பார்த்து வந்தார் அவருக்கு பகலில் டூட்டி கொடுக்காமல் இரவில் டூட்டி கொடுத்தனர் அதற்கு முழு காரணம் ஆனந்த பாண்டி இதனால் எனது தந்தை கடந்த ஆண்டு இரவு நேர பணியில் இருந்த போது மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக செத்தார்.

இதன் காரணமாக ஆனந்த பாண்டியை அவரை செய்ய கடந்த ஓராண்டு காலமாக முடிவு செய்தேன். அதன்படி எனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கடந்த 22ஆம் தேதி பணியில் இருந்த ஆனந்த பாண்டியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு 5பேரும் தப்பி ஓடி விட்டோம்என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாசரேத் சர்ச் தெருவை சேர்ந்த ரெனால்ட் மகன் ரூஸ்வெல்ட் பேட்ரிக் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். இந்த கொலை வழக்கு கடந்த ஒரு வார காலமாக துப்பு துலங்ங்காமல் இருந்த இந்தநிலையில், திறமையாக விசாரணை நடத்தி குற்றவாளி 2 பேரை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory