» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 8:56:25 PM (IST)
வடமேற்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா கடலோர பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனை தொடர்ந்து கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதை கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் நாளை (புதன்கிழமை) மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதே போன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியார் வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகள் அகற்றம் : தூத்துக்குடியில் போலீசார் அதிரடி!
செவ்வாய் 24, மார்ச் 2026 9:07:03 PM (IST)

அனைவரும் ஜனநாயகத்தின் தூதுவர்களாக சென்று பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:44:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அமமுகவுக்கு 2 தொகுதிகள்? உத்தேச பட்டியல் வெளியானது!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:37:09 PM (IST)

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி: இபிஎஸ் வாக்குறுதி!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:29:01 PM (IST)

பிரதமர் ஆற்றிய உரை உண்மைக்கு மாறானது: இந்தியக் கம்யூனிஸ்ட் கடும் குற்றச்சாட்டு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:40:54 PM (IST)

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:35:32 PM (IST)

