» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை முயற்சி வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர்!

புதன் 10, ஆகஸ்ட் 2022 12:12:54 PM (IST)கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  ஆஜரானார். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4வது குற்றவாளியாக  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  சேர்க்கப்பட்டு  கைதாகி பின்னர்  ஜாமீனில் வெளியே வந்தார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்நிலையில் இன்று (ஆக.10ம் தேதி) இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜாராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் என்பவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory