» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆணை வழங்கினார்
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 12:53:52 PM (IST)

குமரி ஆனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை தலைமை செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)

அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் அதிரடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:02:01 AM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)
