» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டியூஷன் படிக்க வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 5:22:27 PM (IST)

வேதாரண்யம் அருகே டியூஷன் படிக்க வந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கத்திரிப்புலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக மருதூரைச் சேர்ந்த அசோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டிமன்ற பேச்சாளராக உள்ள இவர், பள்ளிக்கு அருகில் தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். ஆசிரியர் அசோகனிடம் அந்த பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் டியூஷன் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், டியூஷனில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் அசோகன் வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட 18 மாணவிகள் கடந்த 21 ஆம் தேதி பள்ளி தலைமையாசிரியர் குமாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த புகார் மனுவை தலைமையாசிரியர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள் ஆகியோர் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். இதில், இவரிடம் டியூஷன் படித்த 31 மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேர் கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் அசோகனை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் அசோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory