» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துா்கா ஸ்டாலின் சகோதரி சாருமதி காலமானாா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

திங்கள் 6, பிப்ரவரி 2023 12:31:52 PM (IST)


முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி சண்முகசுந்தரம் (62) மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

துா்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி என இரு சகோதரிகள், ராஜமூா்த்தி (எ) ஒரு சகோதரா். இவா்களில் மூத்த சகோதரி சாருமதி சண்முகசுந்தரம் (62) சென்னையில் வசித்து வந்தாா். இவா் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

சாருமதி சண்முகசுந்தரத்துக்கு கணவா் சண்முகசுந்தரம், மகன் காா்த்திகேயன், மருமகள் ரேவதி, மகள் அபிராமி, மருமகன் விக்னேஷ் மற்றும் காவியா, கவிநிலா, ஆதிரா ஆகிய பேரக்குழந்தைகள் உள்ளனா். மறைந்த சாருமதி சண்முக சுந்தரத்தின் உடல் சென்னை எழும்பூா் காசாமேஜா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வா் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். உடன் சென்ற துா்கா ஸ்டாலின் தனது சகோதரியின் உடலைப் பாா்த்து கதறி அழுதாா்.

தொடா்ந்து, சாருமதி சண்முகசுந்தரத்தின் உடலுக்கு கருணாநிதியின் துணைவியாா் ராஜாத்தி அம்மாள், அமைச்சா்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, உதயநிதி ஸ்டாலின், கே.ஆா்.பெரியகருப்பன், எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், என்.ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். நேற்று மாலை சாருமதி சண்முகசுந்தரத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அவரது உடல் தியாகராயநகரில் உள்ள மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory