» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மழை, குளிர் நேரங்களில் பராமரிப்பதில் பெரும்பாடு : கருப்பட்டி விலை ரூ.300 முதல் உயர்வு!

திங்கள் 6, பிப்ரவரி 2023 4:25:25 PM (IST)



கருப்பட்டி சேமித்து வைக்கும் இடங்களில் மழை மற்றும் குளிர் நேரங்களில் கெடாமல் இருக்கவும் இழகாமல் இருக்கவும் பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதால் 10 கிலோ கருப்பட்டிக்கு சுமார் 300 முதல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பார் உள்பட பல பகுதிகளில் கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. பலர் நேரடி கொள்முதல் செய்துகிட்டங்கிகளில் சேமித்து வைத்து மொத்த மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்து வருகின்றனர். வேம்பாரை பொறுத்தவரை கன்னியாகுமரி இராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் பஸ் நிறுத்தம் உள்பட பல இடங்களில் கருப்பட்டி விற்பனை கடைகள் உள்ளன.

ஏற்கனவே வேம்பார் உடன்குடி கருப்பட்டி இப்பகுதியில் பிரசித்தி பெற்றவை. வெளியூர் வெளிமாநிலம் வெளிநாட்டு பொதுமக்கள் உட்பட அனைவரும் விரும்பி வாங்கும் பொருளாக கருப்பட்டி உள்ளது. மருந்துவம் சார்ந்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து சுக்கு கருப்பட்டி பனங்கற்கண்டு உள்பட அனைத்துமே கலப்படமின்றி இருந்தால் அது சிறந்த மருந்து பொருளாகிறது.

இந்நிலையில் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனை கடைகளில் மழை குளிர் நேரங்களில் கெடாமலும் இழகிய தன்மை ஏற்படாமல் தடுக்கவும் பராமரித்தல் அவசியமாகிறது. பழைய காரை கட்டிடங்கள் பாதுகாப்பான குடோன்களில் இருப்பு வைத்திருப்பவர்கள் இந்நேரங்களில் பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். அவ்வப்போது தேங்காய் சிரட்டைகள் மூலம் நெருப்பு மூட்டி குறிப்பிட்ட வெப்பநிலைக்கு குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். 

கடைகள் வைத்திருப்பவர்கள் நெருப்பு மூலம் பராமரிக்க இயலாத சூழலில் சணல் சாக்குப்பைகளை தைத்து திரையாக மறைத்து வெப்பத்திற்காக சுமார் 600 வாட்சிற்கும் மேலான மின் விளக்குகள் இரண்டு மின்விசிறிகள் என அமைத்து பகல் இரவு என நாள்முழுதும் இயக்கி பாதுகாக்கின்றனர். இத்தகைய பராமரிப்பினால் மின்சாரக் கட்டணம் பணியாளர்கள் ஊதியம் என பல வகையில் செலவு ஏற்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது "மற்ற நேரங்களை விட மழை குளிர் நேரங்களில் எங்களின் பராமரிப்பு இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும். எனவே பராமரிப்பு மற்றும் இதர செலவுகளையும் கணக்கில் கொண்டு இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் அதிக தூரம் செல்பவர்கள் குறைவாக வாங்குவது நல்லது என்றும் அருகில் உள்ளவர்கள் வாங்கும்போது கூடியவரை 10 முதல் 12 நாட்கள் வரைமுறையாக வைத்து பயன்படுத்தலாம் எனவும் கூறுகின்றனர்.

விலை உயர்வு என்றாலும் அத்தியாவசிய மற்றும் மருத்துவ தேவைக்கும் பயன்படுவதால் பொதுமக்கள் தகுதிக்கேற்றவாறு கருப்பட்டியை வாங்கிச் செல்கின்றனர். இயற்கையாகவே பதனீர் உற்பத்தி இல்லாத நேரங்களிலும் இது போன்ற நேரங்களிலும் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory