» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆத்தூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு ரூ.16 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

திங்கள் 6, பிப்ரவரி 2023 5:20:43 PM (IST)

ஆத்தூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்துக்கு ரூ.16 கோடியில் புதிய கட்டிடத்திற்கு   காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ.15.5 கோடி மதிப்பீட்டில் அரசினர் பாதுகாப்பு இல்ல புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இதே போல் ரூ.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையக் கட்டிடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடங்களை 1 வருட காலத்திற்குள் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory