» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெறும் - செங்கோட்டையன் நம்பிக்கை!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:38:24 AM (IST)

திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றியை பெறும்" என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். 

திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

haaahaaFeb 7, 2023 - 12:20:32 PM | Posted IP 162.1*****

super apo maaberum tholvi uruthi... innumada intha ooru ungala nambuthu.. selvatha perukurathule irunga makkaluku nallathu seiyanumgra enname varathe ungaluku.. makkal ungaluku sariyana paadam pugatuvaargal ungaluku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory