» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் 3 தொழிற்சாலைகளுக்கு சீல் : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:15:36 AM (IST)



தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் இரசாயன கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோமஸ்புரம் பகுதியிலுள்ள உப்பாற்று ஓடையில் இரசாயனக் கழிவுநீர் கலக்கப்பட்டு இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இரசாயனக் கழிவுநீர் கடலில் கலப்பதால் கடல்நீர் உயிரினங்களும், அதனை உண்ணும் அனைத்து மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், நீரின் நிறம் மாறியிருக்கும் உப்பாற்று ஓடையை கனிமொழி எம்பி, மாவட்ட ஆட்சியர் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில், உப்பாற்று ஓடையில் இரசாயன கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 மீன் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

tuty sasiFeb 8, 2023 - 10:42:27 AM | Posted IP 162.1*****

DSF

உண்மை தமிழன்Feb 8, 2023 - 10:36:25 AM | Posted IP 162.1*****

மீன்கள் பதனிடும் தொழிற்சாலையில் இரசாயனம் கலப்பதால் நாம் உண்ணும் உணவே விஷம் தானே. மக்களுக்கு எப்படி புரிய வைக்க?

உண்மை தமிழன்Feb 8, 2023 - 10:34:13 AM | Posted IP 162.1*****

தொழிற்சாலைகள் எல்லாம் காசுக்காக மட்டும் வந்தவைகளே , இயற்கையை பாதுகாக்க அறிவு கூட இல்லை. மக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

KARNARAJ RAMANATHANFeb 7, 2023 - 10:12:29 PM | Posted IP 162.1*****

COMPANIES NAME SHOULD BE MENTIONED

மனிதன்Feb 7, 2023 - 08:14:54 PM | Posted IP 162.1*****

தொழிற்சாலைக்கு பெயர் கிடையாதா tuty online

RajaFeb 7, 2023 - 02:37:21 PM | Posted IP 162.1*****

நன்று

MauroofFeb 7, 2023 - 12:47:34 PM | Posted IP 162.1*****

சிறப்பு...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory