» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்டபகலில் வீடுபுகுந்து பெண்ணிடம் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:42:47 AM (IST)

தூத்துக்குடியில் பட்டபகலில் வீடுபுகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, முள்ளகாடு பகுதியில் பீகார் மாநிலம் மந்திப்பூர் மாவட்டத்தை  சேர்ந்த மந்தோஷ் குமார்(32) என்பவர் குடியிருந்து வருகிறார், உப்பளத்தில் கூலி வேலை செய்து வருகிறார், நேற்று பகல் 1மணிக்கு  வீட்டில் அவரது மனைவி குடியா குமாரி, 3வயது மகனுடன் தனியாக வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டில்  சுவர் ஏறி குதித்து அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த கத்தி எடுத்து குடியா குமாரியின் கழுத்தில் வைத்து நகை பணம் கேட்டு மிரட்டி உள்ளார். 

அப்போது அவர் கூச்சலிடவே மர்ம நபர் உடனடியாக அங்கே இருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தனது கணவர் மந்தோஷ்குமாருக்கு தகவல் சொன்னதும் அவர்  உடனடியாக வீட்டுக்கு திரும்பி வந்து மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு, முத்தையாபுரம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சம்பவம் நடைபெற்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் 45 ஆடு, கோழிகள் திருடுபோய் உள்ளது அதேபோல கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு பணம், கேமராக்கள் திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கத்திமுனையில் பெண்ணிடம் மர்ம நபர்  நகை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory