» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு: நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் சேகர்பாபு?

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:04:52 PM (IST)



இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பல இடங்களில் நடைபாதைகளில் சாக்கடை நீர் ஆறாக ஓடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. 

தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருக்கோயில்கள் அரசு துறை அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு சில கோயில்களில் அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தனது வேண்டுதல்களை நிறைவேற வருகின்றனர்.

இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அவ்வப்போது அறநிலையத்துறைக்கு புகார்களும் செல்கின்றன. குறிப்பாக அம்மனுக்கு செலுத்தப்படும் மாலைகள் சுழற்சி முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், தனிப்பட்ட சிலர் சர்வாதிகாரம் செய்வதாகும் கூறப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கும் கடமை அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உண்டு என்பதை மறந்து செயல்படுவது ஏன்? என்று பக்தர்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கோயிலுக்குச் செல்லும் வழித்தடங்களில் சாலைகள் படும் மோசமாக உள்ளன. மேலும், இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்ய செல்லும் வழித்தடங்களில் பல இடங்களில் நடைபாதைகளில் சாக்கடை நீர் ஆறாக ஓடுகின்றன. ஆடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை தர வேண்டிய இடத்தில் இப்படி அசிங்கத்தை கொடுக்கலாமா அறநிலையத்துறை? 

அரசு அதிகாரிகள் பக்தர்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்து கழிவுநீர் கால்வாய் வழித்தடத்தை சீர் செய்து, புனிதமான ஆலயத்தின் பெருமையை அகில உலகமெங்கும் கொண்டு செல்ல முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இவ்விசயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. 


மக்கள் கருத்து

kumarFeb 7, 2023 - 12:53:58 PM | Posted IP 162.1*****

aranilyathurai kodikanakana undiyal varumanathai mattum eduthukondu...koviluku thevayana adippadai vasathigal ethayum murayaga seyvathillai.... koviluku varum ovoru bakthargalum kovil aranilayathurai athigarigalidam kelvi ketka vendum...apoluthavathu itharku vidivukaalam varugiratha endru parpom??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory