» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு: அண்ணாமலை அறிவிப்பு

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:34:39 PM (IST)

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் "தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு பாஜக தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தென்னரசு வெற்றிக்காக பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரை   நிறுத்தியுள்ள பழனிசாமிக்கு நன்றி. கூட்டணியின் நலன் கருதி வேட்பாளரை திரும்ப பெற்ற பன்னீர் செல்வத்துக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களம்காணும் தென்னரசுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

திருச்செந்தூர் முருகன் ஆசியுடன்...Feb 7, 2023 - 04:11:57 PM | Posted IP 162.1*****

சிறப்பான முடிவு தலைவரே... பிஜேபி யின் ஆதரவுடன் EPS தலைமையில் கண்டிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். காங்கிரஸ்க்கு திமுக காரங்களே ஓட்டு போடமாட்டார்கள்.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory