» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் செயின் பறிப்பு: பட்டப்பகலில் துணிகரம்!

வியாழன் 30, மார்ச் 2023 12:17:15 PM (IST)



திருவட்டாரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 3 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

குமரி மாவட்டம், திருவட்டார் அருகே சாரூர் கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), லாரி டிரைவர். இவருடைய மனைவி சுனிதா (36). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் ஏற்றக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், மகன் 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். சுனிதா தினமும் இருவரையும் பள்ளியில் விட்டு அழைத்து வருவது வழக்கம். அதே போல் நேற்று மாலையில் சுனிதா இருவரையும் அழைத்து வர ஸ்கூட்டரில் மூவாற்றுமுகம் பகுதியில் சென்றார். 

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில் ஒருவர் சுனிதா கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்தார். அப்போது அவரிடம் போராடிய சுனிதாவை தாக்கினார். இதனால் சுனிதா ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே 3 பேரும் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதில் சுனிதா படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து சுனிதாவிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் தங்கசங்கிலி பறிப்பு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் மூன்று பேரும் முககவசம் அணிந்து, பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பெண்ணிடம் தங்கசங்கிலியை 3 பேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory