» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ. 5½ லட்சம் ரொக்கம் கொள்ளை: 3 பேர் கைது

வியாழன் 30, மார்ச் 2023 3:27:50 PM (IST)

காஞ்சிபுரம் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. தொழில் அதிபர். இவர் ரங்கசாமி குளம் பகுதியில் சிமெண்ட், கம்பி, டைல்ஸ், பெயிண்ட், உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந்தேதி சுந்தரமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார். 

அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5½ லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை-பணத்தை அள்ளி சென்று இருந்தனர். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குணசேகரன், சென்னையை சேர்ந்த ராஜன், சிவவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் தேடினர். அப்போது ஒரு பையில் 62 பவுன் நகையை மீட்டனர். மேலும் கைதான 3 பேரிடமும் மீதி நகை மற்றும் ரொக்கப்பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

நாயேMar 30, 2023 - 06:47:19 PM | Posted IP 162.1*****

பேங்க் லாக்கர்ல வெச்ச்சா என்னவாம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory