» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு டிக்கெட் மறுப்பு :போலீஸ் விசாரணை!
வியாழன் 30, மார்ச் 2023 4:22:14 PM (IST)
சென்னை சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் குடும்பத்தினை டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அந்த குடும்பத்தினரை பார்வையாளர்கள் உள்ளே விடுமாறு பார்வையாளர்கள் வாக்குவாதம் நடத்திய பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ அணிப்படையில் கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் திரையரங்கிற்கு சென்று நிர்வாகத்திடம் நேரடியில் விசாரணை நடத்தியுள்ளார்.
கண்டனங்கள் தொடரும் நிலையில் இதை குறித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதில் 10 தல படத்திற்கு UA சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுடன் வந்த அந்த குடும்பத்தினரை திரையரங்கு ஊழியர் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்தவர்கள் அதனை புரிந்துகொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் UA சான்றிதழ் பெற்ற படத்திற்கு பெரியவர்களுடன் குழந்தைகள் வந்தால் அனுமதி வழங்க சட்டத்தில் இடம் இருக்கும் நிலையில் அவர்களை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதை குறித்து பதிவிட்டிருக்கும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் எதிர்ப்பிற்கு பின் நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்க பட்டிருந்தாலும் முதலில் அவர்களை அனுமதிக்காதது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். கலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)
