» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கைது செய்ய வேண்டும்: சீமான் அறிக்கை!
வியாழன் 30, மார்ச் 2023 4:35:40 PM (IST)
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடாக இயங்கும் கல்குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, பாறைகள் வெடி வைத்துத் தகர்க்கும்போது உருவாகும் மண் துகள்கள் நிலங்களில் படிவதால் வேளாண்மை செய்ய முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும் பார உந்துகளால் சாலைகளும் அடிக்கடி சேதமடைவதோடு, அது குறித்துப் புகாரளிக்கும் பொதுமக்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமெனவும், தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது திமுகவினர் நடத்தும் தாக்குதல்களை இனியும் தொடராது தடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுவதை திமுக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
200 உபிApr 2, 2023 - 07:22:06 PM | Posted IP 162.1*****
தேர்தல் வரும்போது குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று நடித்து விட்டு, ஆட்சிக்கு வந்ததும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று கூறுவான் அவன் யார் அதானே நிஜ டுபாக்கூர்.
UTHAYANApr 2, 2023 - 02:17:03 PM | Posted IP 162.1*****
பேனா சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாதிரி நடித்து விட்டு, பின்னால் இவனே பேனா சிலை வைக்க ஆதரவு கொடுப்பான் , அப்போதாவது தம்பிகள் புரிந்து கொள்ளவேண்டும் இவன் ஒரு டுபாக்கூர் என்று.....
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

UTHAYANApr 3, 2023 - 03:36:34 PM | Posted IP 162.1*****