» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய அளவில் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து

வியாழன் 30, மார்ச் 2023 8:16:51 PM (IST)



தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வாழ்த்து தெரிவித்தார். 

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த ராகவானந்தம் - ரா.மாலதி தம்பதியரின் மகள் பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 25ஆவது தேசிய அளவிலான காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு வென்றுள்ளார். 

இந்நிலையில், தான் வென்ற வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இதுபோன்று இன்னும் பல பதக்கங்களைப் பெற்று வெற்றிபெற வேண்டும் என மாணவியை வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, சார் ஆட்சியர் கௌரவ் குமார் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு , மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட தடகள கழகச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தடகள கழகப் பொருளாளர்/பயிற்சியாளர் அருள்சகாயம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மெய்கண்டன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

P.S. RajMar 30, 2023 - 10:20:22 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory