» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் நிதி நிறுவனம் ரூ.20 இலட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வெள்ளி 2, ஜூன் 2023 8:28:31 PM (IST)
சேவை குறைபாடு காரணமாக தனியார் நிதி நிறுவனம் ரூ.20 இலட்சம் வழங்க குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சார்ந்த கிருஷ்டி பீனா என்பவருடைய கணவர் அணில் குமார் என்பவர் நாகர்கோயிலிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதோடு இந்த கடனுக்காக ரூ.20 இலட்சத்திற்க்கு காப்பீடு செய்திருந்தார். அதன் பிறகு தவணைகளை முறையாக செலுத்தியிருந்தார். திடீரென அணில் குமார் இறந்து விட்டார். இதன் பிறகும் கடனுக்கான தவணைகளை தனியார் நிதி நிறுவனம் கடன்தாரர் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து வந்தது.
இவ்வாறு பிடிப்பதை நிறுத்தம் செய்யுமாறும், கடன் பெற்றவர் இறந்து விட்டதால் காப்பீடுத் திட்டத்தின் மூலம் பணத்தை பெற்று கடனை சரி செய்யுமாறும் கிருஷ்டி பீனா தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டுள்ளார். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காப்பீடுத் தொகை ரூ.20,00,000, மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு ரூ.10,000, வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
