» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 29, செப்டம்பர் 2023 3:48:16 PM (IST)

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் ரகுராமன் (30), இவர் கணவரை இழந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறிதது புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிந்து ரகுராமனை கைது செய்தார். 

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகளிர் விரைவு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம்  குற்றவாளி ரகுராமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.  இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory