» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 4:09:34 PM (IST)

சென்னையில் வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பியுமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, வியாழக்கிழமை காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல், இன்று(செப். 29, வெள்ளிக்கிழமை) காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் பேசியதுடன் ஆறுதலும் தெரிவித்தார்.
நாளை(செப். 30, சனிக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
